சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்குவிண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்குவிண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொைக மற்றும் பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க இந்திய அரசின் www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (என்.எஸ்.பி.) 15.11.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்/ ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு 30.11.2022 வரையிலும் மேற்படி இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதியான சிறுபான்மையினர் மாணவ-மாணவிகள் அனைவரும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.