அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

செம்பனார்கோவில் அருகே மேலக்கட்டளை அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தகள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே மேலக்கட்டளை அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தகள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அவரைக்குளம் மாரியம்மன் கோவில்

செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சிக்குட்பட்ட மேலக்கட்டளை கிராமத்தில் அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 20-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து வீதிஉலா நடந்தது.

தீமிதி திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலையில் திரளான பக்தர்கள் செம்பனார்கோவில் கீழ முக்கூட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் கரகம் மற்றும் அலகு காவடிகளை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை அடைந்தனர்.

தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்

பின்னர் தீக்குண்டம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள செய்யப்பட்டது. இதையடுத்து காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story