மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

திருமருகல் அருகே மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story