திண்டிவனம் பகுதி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு வெகுமதி வழங்கி பாராட்டு


திண்டிவனம் பகுதி  போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு  வெகுமதி வழங்கி பாராட்டு
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வருகை தந்தார். தொடர்ந்து அவர் வருகை பதிவேடு, குற்ற பதிவுகள், முதல் அறிக்கை பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? புகார் அளிக்க வரும் மக்களுக்கு போதிய இருக்கைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். பின்னர் போலீசாரிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது நல்ல முறையில் பதிவேடுகளை பராமரித்த எழுத்தர் மனோவுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார். இதேபோல் ரோஷனை போலீஸ் நிலையத்திலும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, ஒலக்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story