திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கி 2நாட்கள் நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது. பி.ஏ., பி.பி.ஏ., பி.காம். படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு நாளை மறுநாளும் (புதன்கிழமை), பி.எஸ்சி. படிப்பில் அனைத்து பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 7-ந்தேதியும் (வியாழக்கிழமை) கலந்தாய்வு நடைபெறும்.

எனவே அந்தந்த பிரிவு மாணவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story