திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர் சாதனை
தேசிய சிலம்பம் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 320 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின், ஆதித்தனார் கராத்தே சிலம்பம் கிளப் சார்பாக வணிக நிர்வாகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜே.நவீன் கலந்து கொண்டார். அவர் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா, உதவி பேராசிரியர்கள் அ.தர்மபெருமாள், ம.ரெ.கார்த்திகேயன், டி.செல்வகுமார், சிலம்பம் பயிற்சியாளர் வி.ஸ்டீபன், கராத்தே சிலம்பம் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.ரா.ப.தி.முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story