திருச்செந்தூர்-நெல்லை ரெயில் ரத்து


திருச்செந்தூர்-நெல்லை ரெயில் ரத்து
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர்-நெல்லை ரெயில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி-கடம்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சென்னை-திருச்செந்தூர்-சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இதன் இணை ரெயில்களான திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர்-நெல்லை சிறப்பு ரெயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் ஆகியவை இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story