திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா


திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் 12-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நர்சிங் கல்லூரி முதல்வர் கலைகுருசெல்வி வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் விளையாட்டு விழாவின் கொடி ஏற்றினார். பின்னர் அவர், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜோஸ்பின் பிரியங்கா கலந்துகொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். விளையாட்டு வீராங்கனைகள், விளையாட்டு தீபம் ஏந்தி வந்து தீபத்தை ஏற்றினார்கள். அனைத்து விளையாட்டு வீராங்கனைகளின் சார்பாக 4-ம் ஆண்டு மாணவி வெண்ணிலா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். விழாவில், மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், தட்டெறிதல், அம்பு எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், பந்து வீசுதல், கோ-கோ, இறகு பந்து, வளையம் வீசுதல், சதுரங்கப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். நர்சிங் கல்லூரி இணை பேராசிரியர் ஹேமா நன்றி கூறினார். விழாவில் அனைத்து ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.


Next Story