திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலை கரைப்பு


திருச்செந்தூர் கடலில்  விநாயகர் சிலை கரைப்பு
x

திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஒன்றிய இந்து மக்கள் கட்சி சார்பில் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி, ஆதித்தனார் காலனி, வள்ளுவர்நகர், ராமநாதபுரம், குமராசாமிபுரம், நா.முத்தையாபுரம், சண்முகபுரம், லெட்சுமிதானபுரம், தேரிக்குடியிருப்பு, மத்திமான்விளை சுப்பிரமணியபுரம், ஆகிய ஊர்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் காயாமொழி முப்புடாதி அம்மன் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தளவாய்புரம், காந்திபுரம், குமாரபுரம் வழியாக திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் லிங்கவேல் ஆதித்தன், ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஷ், அனுமன் சேனா ஒன்றிய தலைவர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் முருகப்பெருமாள், தெற்கு மாவட்ட துணை செயலாளர் குமார், காயாமொழி கிளை தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story