திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ3.09 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஜூலை மாத உண்டியல் வருவாய் ரூ3.09 கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில், இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறப்பு நடந்தது. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 90 லட்சத்து 30ஆயிரத்து 175-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.13ஆயிரத்து 621-ம், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 91ஆயிரத்து 790-ம், அன்னதான உண்டியல் மூலம் ரூ.18 லட்சத்து 21 ஆயிரத்து 342-ம், மேலக்கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.14 ஆயிரத்து 944-ம் சேர்த்து ஆக மொத்தமாக ரூ. 3 கோடியே 9 லட்சத்து 71 ஆயிரத்து 872 வருவாய் கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 1 கிலோ 900 கிராம், வெள்ளி 29 கிலோ, பித்தளை 30 கிலோ, செம்பு 10 கிலோ, தகரம் 3½ கிலோ மற்றும் வெளிநாட்டு பணம் 552-ம் இருந்தது.
உண்டியல் எண்ணும் பணியின்போது அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர்கள், பொதுமக்கள் பிரதிநிதியாக வேலாண்டி, கருப்பன், மோகன் அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.