திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி


திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி கிடைத்துள்ளது. மேலும் 1½ கிலோ தங்கமும் கிடைத்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல்முறையாக உண்டியலை திறந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், ஆய்வர்கள் செந்தில்நாயகி, நம்பி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், கோவில் பணியாளர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ.2 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 665 காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 690 கிராமும், வெள்ளி 27 கிலோ 500 கிராமும், 405 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story