உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18, 19, 21, 22ஆகிய தேதிகளில் கோவில்பட்டிவரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

x

திருப்பூர்

உடுமலை

உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18, 19, 21, 22ஆகிய தேதிகளில் கோவில்பட்டிவரை மட்டுமே இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் ரெயில்

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கோவில்பட்டி வரை

இந்தநிலையில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகளுக்காக, திருச்செந்தூர் செல்லும் ரெயில் வருகிற 18,19 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.இந்த தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

----

Next Story