திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிகிருத்திகை வழிபாடு


திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிகிருத்திகை வழிபாடு
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிகிருத்திகை வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நேர்த்திக் கடன் செலுத்தினர்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.


Next Story