திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை


தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 10:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சிநிலையத்தில்நேரடிமாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ேசர்த்து கொள்ளப்படுவர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை

திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. 8-ம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரலாம். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750-ம், இலவச பஸ் சலுகை, இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடைகள், காலனி மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதல் உதவித்தொகை ஆகியவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

விவரங்களுக்கு..

மேலும் பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதே போன்று 8-ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ, 04639-242253, 91235 04636, 98427 57985, 94882 01582, 94990 55813 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story