திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் 'இ-நூலகம்'
திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் ‘இ-நூலகம்’ திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள அவரது மணிமண்டப வளாகத்தில் உள்ள நூலகம் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு 'இ-நூலகம்' திறப்பு விழா நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, கணினிமயமாக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ''கல்வி, ஆன்மிகம், விளையாட்டு, பத்திரிகை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அய்யா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் தனி முத்திரை பதித்து எண்ணற்ற சாதனைகள் புரிந்தார். ஏராளமான நற்செயல்களை புரிந்து, கணக்கில் அடங்காதவர்களுக்கு பேருதவிகளை புரிந்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது புகழ் என்றும் செழித்தோங்கும்'' என்றார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.