திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் பொங்கல் விழா


திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மகளிர் நல அமைப்பு மற்றும் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுகலை பிரிவு மாணவிகள் கல்லூரி வளாகத்திலுள்ள சித்தி விநாயகர் முன்பு வண்ண கோலமிட்டு பொங்கலிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு இயக்குனர் நித்தியானந்த ஜோதி, பேராசிரியைகள் சாந்தி, வசுமதி, முருகேஸ்வரி, கோகிலா ஆகியோர் செய்திருந்தனர். பொங்கல் பொங்கி வந்தபோது, பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். விழாவில் துறைதலைவர்கள் ரமேஷ், பசுங்கிளி பாண்டியன், பாலு, வேலாயுதம், கவிதா, சிவக்குமார், சிங்காரவேலு, சிரில் அருண், சுந்தரவடிவேல், பாலகிருஷ்ணன் மற்றும் போராசிரியைகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர். அனைத்து இளநிலை பிரிவு மாணவ, மாணவியரும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அலுவலர்கள் சார்பிலும் பொங்கலிட்டு, விளையாட்டு போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story