திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி


திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2¼ கோடி கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல், மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் எண்ணப்பட்டன.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் ராம்தாஸ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், ஆய்வர்கள் செந்தில்நாயகி, ருக்மணி, சண்முகராஜா, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, சுப்பிரமணியன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.2¼ கோடி

இரண்டு நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரத்து 483 கிடைத்துள்ளது.

மேலும் தங்கம் 1 கிலோ 525 கிராமும், வெள்ளி 32 கிலோ 700 கிராமும், 237 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story