திருச்செந்தூர் சன்னதி தெருவில் கண்காணிப்புகேமரா பொருத்த கோரிக்கை
திருச்செந்தூர் சன்னதி தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்த நுகர்வோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராசுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், சிவன் கோவில் முன்பு உள்ள பந்தல் மண்டபம் பகுதியில் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். கீழ ரதவீதி, சன்னதி தெரு முகப்பில் பஸ்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பஸ் நிறுத்தத்தை திருவாடுதுறை ஆதீனம் மண்டபம் முன்பு அமைக்க வேண்டும். அதேபோல் பொது மக்கள், பக்தர்களின் பாதுகாப்பு கருதி சன்னதி தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. அப்போது, திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லாஹ், திருச்செந்தூர் நகர தலைவர் ராஜமாதங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story