சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாரங்கபாணி கோவில்
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 வைணவ கோவில்களில் ஒன்றாக பல்வேறு சிறப்புகள் பெற்றதாக உள்ள சாரங்கபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உற்சவத்தை முன்னிட்டு வருகிற 12-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் தாயார், பெருமாள் வீதிஉலா நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பெருமாள் தாயார் புறப்பட்டு தேசிகர் சன்னதி எதிரில் மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவமும், திருக்கல்யாணமும் நடந்தது. கோமளவல்லித் தாயார் உடனாகிய சாரங்கபாணி சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.