கல்யாண வெங்கடேசபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


கல்யாண வெங்கடேசபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x

கல்யாண வெங்கடேசபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா நடந்து வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி அலர்மேல் மங்கைதாயார் சமேத கல்யாண வெங்கடேசபெருமாளுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


Next Story