திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
செங்கோட்டையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. செங்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்தனர். சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர்கள் அருணாசலம், சுந்தரவடிவேல், புலவர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் ராஜன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
செங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் நிஷாந்த் காளி முதல் பரிசையும், எஸ்.ஆர். எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேவதி பரம துர்கா 2-வது பரிசையும், நித்ய தர்ஷினி 3-வது பரிசையும் பெற்றனர். மவுண்ட் ஹில்டன் பள்ளி மாணவர் தயா 100-க்கும் மேற்பட்ட திருக்குறளை ஒப்புவித்து சிறப்பு பரிசையும், ஊக்கப்பரிசையும் பெற்றார். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.