திருக்கோகா்ணம் பிரகதாம்பாள் கோவில் குளக்கரையில் தடுப்புகள் அமைப்பு


சமூக விரோத செயல்களை தடுக்க திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் குளக்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை

பிரகதாம்பாள் கோவில்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரசித்தி பெற்ற பிரகதாம்பாள் கோவில் அருகே பழமையான குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் உள்ளது. இக்கோவில்களுக்கு தீர்த்த நீர் உள்பட பூஜைகளுக்கு தேவையான நீர் இக்குளத்தில் எடுத்து பயன்படுத்துவது உண்டு.

ஆனால் இக்குளம் சரியானபராமரிப்பு இல்லாததால் பாசிபடர்ந்தும், தாமரை செடிகள் உள்ளிட்டவை வளர்ந்துள்ளன. மேலும் கரையில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.

தடுப்புகள் அமைப்பு

இந்த நிலையில் குளக்கரைக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் குளத்தின் படிக்கரைக்கு செல்லக்கூடிய பகுதியில் தடுப்புகள் வைத்து அடைத்தனர். இதனால் மதுப்பிரியர்கள் குளக்கரைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அந்த குளத்தில் தற்போது தண்ணீர் முழுவதுமாக நிரம்பி உள்ள நிலையில் செடிகள் படர்ந்து இருப்பதால் குளத்தில் தண்ணீர் இருப்பதே தெரியவில்லை. மேலும் தரைத்தளத்தோடு வயல்வெளி போல் குளம் காட்சியளிக்கிறது.


Next Story