அம்பலவாண சுவாமி கோவிலில் திருப்பணிகள்


அம்பலவாண சுவாமி கோவிலில் திருப்பணிகள்
x

மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடந்தது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் சுமார் 110 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இக்கோவிலில் ரூ.69 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி முதலாவதாக கற்சுவர்கள் மற்றும் கல்வெட்டுகள் அமைந்த தூண்களை தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும் திருப்பணிகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கோபுர வேலைகள், கோவில் மேற்கூரை புதுப்பித்தல், கல்வெட்டுகளை பராமரித்தல், வயரிங் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, துணை ஆணையர் ஜான்சிராணி, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் ஐயர் சிவமணி ஆகியோரும் கலந்து கொண்டு திருப்பணிகள் குறித்து ஆய்வுகள் செய்தனர். மானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், பா.ஜ.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் முத்தையா, பஞ்சாயத்து தலைவர்கள் பராசக்தி செல்வின் துரை, தன்சில் ரோஸ் முகமது, கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.


Next Story