திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் பக்தர்களின் கூட்டத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபர் கைது


திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் பக்தர்களின் கூட்டத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2023 2:17 AM IST (Updated: 4 Jun 2023 7:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் பக்தர்களின் கூட்டத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் பக்தர்களின் கூட்டத்தில் சுற்றித்திரிந்த வங்காளதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வங்காளதேச வாலிபர் கைது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் வைகாசி விசாக திருவிழா நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். இந்த நிலையில் வங்காள மொழியில் பேசியபடி கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வங்காளதேசம் போக்ரா பகுதியை சேர்ந்த மூசாகரிமுல்லா(வயது 37) என்று தெரியவந்தது. அவரிடம் இந்தியாவுக்குள் நுழைவதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதனையடுத்து, மூசாகரிமுல்லா வைத்து இருந்த பையை சோதனையிட்டனர். அதில் இந்திய வரைபடத்துடன் கூடிய காகிதம் ஒன்று இருந்தது. இதனையொட்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் மூசாகரிமுல்லாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி?

வங்காளதேசத்தை சேர்ந்த நபர் முறையான அனுமதி பெறாமல் கடல் வழியாக இந்தியாவிற்குள் வந்தது எப்படி? அதுவும் திருப்பரங்குன்றம் கோவில் திருவிழாவில் கூட்டத்திற்குள் எதற்காக நுழைந்தார்? இவருடன் வேறு நபர்கள் வந்துள்ளார்களா? மதுரையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? குற்ற சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளரா? என்பது உள்பட பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் கோவில் திருவிழாவில் வங்காளதேச வாலிபர் சுற்றித்திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே மட்டுமல்லாது போலீஸ் வட்டாரத்தையும் உலுக்கி உள்ளது.


Related Tags :
Next Story