வாசிப்பு திறன் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் சாதனை


வாசிப்பு திறன் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் சாதனை
x

வாசிப்பு திறன் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

திருப்பத்தூர்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த தமிழக அரசு ரீடிங் மாரத்தான் என்னும் வாசிப்பு திறன் போட்டியை நடத்தியது. இதில் திருப்பத்தூர் மாவட்டம் 5 லட்சம் புள்ளிகளை பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி கோப்பை வழங்கினார். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த தன்னார்வலர்களை பாராட்டும் விதமாக ரீடிங் மாரத்தான் வெற்றி விழா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்விஅலுவலர் வேதபிரகாஷ், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருப்பத்தூர் துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர் கலந்து கொண்டு வெற்றிக்கு காரணமான தன்னார்வலர்களை பாராட்டி விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் கோமதி, அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முனிராஜ், துணைத்தலைவர் துரைமணி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், தங்கம், அறிவழகன் கோபிநாதன் சிவக்குமார், பூவேந்தன் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story