திருப்பூரை சேர்ந்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்
திருப்பூரை சேர்ந்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்
திருப்பூர்
திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்தவர் முத்து முகமது (வயது 55). இவர் தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவராக உள்ளார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகும். கடந்த 21 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி விட்டு கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட டெல்லி சென்று வேட்பு மனு வாங்கி வந்துள்ளேன். தமிழகத்தில் இருந்து நான் போட்டியிடுவதால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சி தலைவர்களின் ஆதரவை கேட்டுள்ளேன்.
அதுபோல் ஆந்திர முதல்-மந்திரியிடம் ஆதரவு கேட்க உள்ளேன். உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறேன்.
வருகிற 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். கல்வி, மருத்துவம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக கிடைக்கச்செய்வேன். சாதி, மத வேறுபாடுகளை களைந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன். கொரோனா காலத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி சேவை செய்துள்ளேன். இறந்தவர்களின் பிணங்களை வேறுபாடு இல்லாமல் அடக்கம் செய்துள்ளோம். எனக்கு ஆதரவு அதிகம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.