திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி


திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி
x

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 7 இடத்துக்கு திருப்பூர் மாவட்டம் பின்தங்கியுள்ளது.

96.57 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. தேர்வு முடிவுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டார். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 269 மாணவர்கள், 13 ஆயிரத்து 126 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 726 மாணவர்கள், 12 ஆயிரத்து 833 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களில் 95.18 சதவீதமும், மாணவிகளில் 97.77 சதவீதமும் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் மொத்தம் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

7-வது இடத்துக்கு பின்தங்கியது

கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 7-வது இடத்துக்கு பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் படித்த 80 பேர் தேர்வு எழுதி 80 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் படித்த 329 பேர் தேர்வு எழுதி 283 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 2 ஆயிரத்து 215 பேர் எழுதி, 2 ஆயிரத்து 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த 8 ஆயிரத்து 415 பேர் எழுதி, 7 ஆயிரத்து 860 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்து அறநிலைய பள்ளிகளில் படித்த 168 பேர் தேர்வு எழுதி, 156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நகராட்சி பள்ளிகளில் படித்த 2 ஆயிரத்து 184 பேர் எழுதி, 2 ஆயிரத்து 88 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாதியளவு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 729 பேர் எழுதி, 715 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் படித்த 9 ஆயிரத்து 492 பேர் எழுதி, 9 ஆயிரத்து 437 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.74 சதவீதம் ஆகும் சுயநிதி பள்ளிகளில் படித்த 813 பேர் எழுதி, 813 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

---------

குறிப்பு படம் உண்டு.

----


Related Tags :
Next Story