திருத்தணி நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்


திருத்தணி நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்
x

திருத்தணி நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஜோதி நகர் திருத்தணி, திருப்பதி நெடுஞ்சாலை ரோட்டில் ஒரு பகுதியில் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும், இதே சாலையில் உள்ள பாப்பான் குளம் தொடக்கப் பள்ளி அருகே பாதாள சாக்கடையின் மேன்ஹோல் சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாகவும், சேதமடைந்தும் உள்ளது. இதனால் தினமும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் சாலைகளில் விழுந்து எழும் சம்பவம் நடக்கிறது. பள்ளி மாணவா்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் பெற்றோர்களும், புதிதாக இந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகளும் சேதமடைந்து இருக்கும் இடத்தை கண்டதும் திடீர் பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. இது போன்று எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில் மற்றொரு புறம் மோசமான இந்த சாலையால் நடக்கும் விபத்துகள் பதற வைக்கின்றன.

இந்த சாலையில்தான் நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு அதன் அதிகாரிகள் உள்பட பல அரசுத்துறை அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர். பிரதான சாலையில் விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


Next Story