நாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா
உடன்குடி பொத்தரங்கன்விளை நாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை நாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 10-ம் திருநாளன்று யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர்எடுத்து நடராஜர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் நடராஜர் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story