துறைகாட்டும் வள்ளலார் கோவிலில் திருவாதிரை சிறப்பு வழிபாடு


துறைகாட்டும் வள்ளலார் கோவிலில் திருவாதிரை சிறப்பு வழிபாடு
x

செம்பனார்கோவில் அருகே துறைகாட்டும் வள்ளலார் கோவிலில் திருவாதிரை சிறப்பு வழிபாடுநடந்தது.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே விளநகர் துறைகாட்டும் வள்ளலார் கோவிலில் நேற்று திருவாதிரை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நடராஜப்பெருமானுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், மஞ்சள்பொடி, திரவியபொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவிலில் உள்ள சிவகாமி அம்மனுக்கும் அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story