சங்கர ராமேசுவரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
சங்கர ராமேசுவரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி, பாளையங்கோட்டை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சிவதாமோதரனின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 48 இடங்களில் முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் மாணிக்கவாசர் அருளிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருவாசக சித்தர் சிவதாமோதரன் தலைமை தாங்கி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தினார். உலக நன்மை, இயற்கை வளம் உள்ளிட்டவை வேண்டி திருவாசகம் பாடப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story