த.மா.கா. வினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் த.மா.கா. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று த.மா.கா. நகர தலைவர் கே. பி. ராஜகோபால் தலைமையில் காலி மதுபாட்டில்களை கழுத்தில் தொங்க விட்டவாறும், உடுக்கை அடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் எஸ்.ஏ. கனி, மாவட்ட செயலாளர் பொன்ராஜ், பொது செயலாளர் கணேசன், பொருளாளர் செண்பகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். பின்னர் உதவி கலெக்டரிடம் கோரிக்ைக மனுவை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story