த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

ஆம்பூரில் த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக்கோரி ஆம்பூரில் த.மு.மு.க. சார்பாக நகர தலைவர் தப்ரேஸ் அஹ்மத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் ஒசூர் நவ்ஷாத், மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினா்.

மாநில மருத்துவசேவை அணி துணை செயலாளர் தாஹா முஹம்மத், மாவட்ட துணை செயலாளர்கள் தப்ரேஸ் அஹ்மத், இம்ரான், மமக மாவட்ட துணை செயலாளர் சித்திக் அஹ்மத், நகர செயலாளர் நபீசுர் ரஹ்மான், மமக நகர செயலாளர் ஜமீல் அஹ்மத், மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story