2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.9-ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு


2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.9-ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு
x

2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 18 மற்றும் 19-ம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

2023 ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநயகர் அப்பாவு தெரிவித்துள்ள்ளார்.

ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.

கூட்டத்தொடரில் பங்கேறும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.


Next Story