திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதுதான் பள்ளிக் கல்வித் துறையின் வேலையா? - அண்ணாமலை காட்டம்


திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதுதான் பள்ளிக் கல்வித் துறையின் வேலையா? - அண்ணாமலை காட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2022 12:53 PM IST (Updated: 24 Aug 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார்.

சென்னை,

திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?

இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதல்- அமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார். இன்று முதல் 3 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல் அமைச்சர் கலந்து கொள்கிறார்.




Related Tags :
Next Story