தமிழ்நாட்டில் மேலும் 8 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் மேலும் 8 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 7 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவார்கள். செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, புதுகோட்டை, திருச்சியில் தலா ஒருவருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் 32 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story