தமிழ்நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் மேலும்  10 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10 பேர் இன்று பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 4 பேர், பெண்கள் 6 பேர் அடங்குவர். சென்னையில் 3 பேர், கோவை, நாமக்கல்லில் தலா 2 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனர். சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பயணிக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

33 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா சிகிச்சையில் 56 பேர் உள்ளனர். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் பொது சுகாதார இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story