தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்


தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 5 July 2022 7:49 PM IST (Updated: 5 July 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு கிடு கிடுவென அதிகரித்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால், கொரோன வழிகாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

  • தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 2,662- ஆக பதிவாகியுள்ளது.
  • கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,765 ஆக உயர்ந்துள்ளது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,542- ஆக உள்ளது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் 373 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 137 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 132 பேருக்கும், திருச்சி 112- பேருக்கும், காஞ்சிபுரம் 89 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story