தமிழகத்தில் இன்று 255- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் இன்று 255- பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 249- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 255- ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இரட்டை இலக்க எண்களில் பதிவாகி வந்த கொரோனா, தற்போது கிடு கிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 255 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் புதிதாக 130 ஆண்கள், 125 பெண்கள் என மொத்தம் 255 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 127 பேர், செங்கல்பட்டில் 44 பேர், திருவள்ளூரில் 16 பேர், உள்பட 19 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 19 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. தமிழகத்தில் 134 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 88-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story