தமிழகத்தில் மேலும் 596- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 596- பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 589-ல் இருந்து 596- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 182- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 217- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று 15 ஆயிரத்து 953- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story