தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,827-ல் இருந்து 2,069- ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 2,069- ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் ஒருநாள் பாதிப்பு 771-ல் இருந்து 909- ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 352, திருவள்ளூர்-100, கோவை -96, கன்னியாகுமரி -61, காஞ்சிபுரம் -71, திருச்சி -62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்றைய நிலவரப்படி 11 ஆயிரத்து 94 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 745 பேரும், செங்கல்பட்டில் 1,923 பேரும், கோவையில் 693 பேரும், திருவள்ளூரில் 627 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story