தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20-க்கும் கீழ் வந்தது


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20-க்கும் கீழ் வந்தது
x

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த பல வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 20 க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று புதிதாக 7 ஆண்கள், 12 பெண்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர் உள்பட மொத்தம் 10 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தேனி, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.


Next Story