தமிழகத்தில் இன்று 162 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று கொரோனா பாதிப்பு 162- ஆக குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று கொரோனா பாதிப்பு 162- ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் இன்று புதிதாக 95 ஆண்கள், 67 பெண்கள் உள்பட மொத்தம் 162 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 41 பேர், செங்கல்பட்டில் 13 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் 226 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,898 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.