தமிழகத்தில் மேலும் 421 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும்  421 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 421 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 94 பேர், கோவையில் 63 பேர், செங்கல்பட்டில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களை விட சற்று உயர்ந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் 407 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 811 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 219 பேரும், கோவையில் 475 பேரும், செங்கல்பட்டில் 288 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story