தமிழகத்தில் மேலும் 531 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும்  531 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Sep 2022 3:27 PM GMT (Updated: 2022-09-29T21:50:54+05:30)

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 507 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று புதிதாக 531 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 98 பேர், செங்கல்பட்டில் 51 பேர், கோவையில் 40 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மருத்துவமனையில் 412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 507 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 382 பேரும், செங்கல்பட்டில் 432 பேரும் , கோவையில் 333 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story