டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x

டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.) அறக்கொடை அறக்கட்டளை சார்பில் 2014-ம் ஆண்டு முதல் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய பயிற்சி குழும அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதில் சேர விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து வேலைநாட்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324-296442 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூலை 9-ந்தேதி மாலை 5 மணிக்குள், டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


Next Story