தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுநடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 63 ஆயிரத்து 388 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30மணி வரை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதுபவர்களுக்காக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், எட்டையபுரம், விளாத்திகுளம் மற்றும் கயத்தார் ஆகிய 10 வட்டங்களில் மொத்தம் 223தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 63 ஆயிரத்து 388 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பறக்கும் படை

இந்த தேர்வு பணிக்கென 41கண்காணிப்பு குழுக்களும், கண்காணிப்பு பணிக்கு உதவி கலெக்டர் நிலையில் 10 அலுவலர்களும், 18 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளவாறு காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் ஆஜராக வேண்டும். 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வருகை தரும் விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், தகவல் பதிவுசெய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வு எழுத செல்பவர்களுக்கு வசதியாக அனைத்து தேர்வு மையங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துகழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளனர்.


Next Story