ஒப்பந்த பணி நியமன முறையை ரத்து செய்யக்கோரிபோக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த பணி நியமன முறையை ரத்து செய்யக்கோரிபோக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஒப்பந்த பணி நியமன முறையை ரத்து செய்யக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சேலம்

சேலம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், சேலம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள பள்ளப்பட்டி போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜான்சன்பேட்டை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு மாநிலக்குழு உறுப்பினர் இளவழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணி மனை முன்பு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை தமிழக அரசு ஒப்பந்த முறையில் பணிநியமனம் செய்வதை கண்டித்தும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


---





Next Story