தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் பறிப்பு


தனியார் நிதி நிறுவன ஊழியரிடம்   ரூ.1¼ லட்சம் பறிப்பு
x

அருப்புக்கோட்டை அருேக தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¼ லட்சத்தை பறித்து சென்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருேக தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1¼ லட்சத்தை பறித்து சென்றனர்.

நிதி நிறுவன ஊழியர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள மறையூரை சேர்ந்தவர் வீரசுப்பிரமணியன் (வயது 23). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தொகையை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் இவர் ராமசாமிபட்டி, மண்டபசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடனுக்கான தொகையை வசூலித்து விட்டு மோட்டார் சைக்கிளில் மறவர் பெருங்குடி வழியாக பந்தல்குடி அருகே கொப்புசித்தம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இவரிடம் லிப்ட் கேட்பது போல் மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர்.

பணம் பறிப்பு

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வீர சுப்பிரமணியன் பந்தல்குடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story