தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்:உதவி ஆணையர் தகவல்


தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்:உதவி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உதவி ஆணையர் தெரிவித்தார்.

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நல்ல தொழில் உறவை பேணிக்காக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் http://www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story